டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர், மதியழகன் நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் ( வயது 22) இவர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நேற்று மாலை கைது செய்தனர். இவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது மேலும் விசாரணை நடந்து வருகிறது.