தண்டவாளத்தை பிரிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ராக் சேஞ்சரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஒரே தண்டவாளத்தில் 5க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன.
அரக்கோணம், பெரம்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சேர்வதற்கு முன்பு பேசின்பிரிட்ஜ் சந்திப்பில் தடம் பிரிந்து வெவ்வேறு நடைமேடையில் செல்லும். ஆனால் இன்று காலையில் தண்டவாளங்களை பிரிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ராக் சேஞ்சரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஒரே தண்டவாளத்தில் 5 ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இத்தொழில்நுட்ப கோளாறு ஒரு மணி நேரத்துக்கு பிறகு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு, இப்போது ரயில்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply