கோவை மே 28 கோவை சிங்காநல்லூர் எஸ். ஐ. எச். எஸ். காலனி, சங்கர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38) கால் டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 16- ‘ஆம் தேதி இவரது மனைவியும், குழந்தைகளும் நெல்லையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றுவிட்டனர். சுரேஷ் குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் மனைவியின் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தாயார் தாமரைச்செல்வி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கால்டாக்சி டிரைவர் தூக்கில் தற்கொலை .
