காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – அமைச்சர் கோவி.செழியன் தகவல்.!!

சென்னை: தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் துணிச்சலை போற்றும் வகையில் முதல்வர் தலைமையில் ஒற்றுமை பேரணி நடைபெற உள்ளது. ஒற்றுமை பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர் என்றும் அவர் பேட்டி அளித்தார்.