திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்க பேரவை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது இக் கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் முருகேசன், முத்து சுப்பையன் மற்றும் மாநில இணைச் செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை செயலாளர் ராமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் ஆறுமுகம் ஆண்டறிக்கை வாசித்தார், மாநில பொருளாளர் அப்துல் வதூத் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.
இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சாரங்கபாணி தீர்மானங்களை வாசித்தார். முடிவில் மாநில இணைச் செயலாளர் தேவராஜன் நன்றி கூறினார்.
Leave a Reply