இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை.!!

ன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் அத்துமீறல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மூன்று மணிநேரத்திற்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி இருப்பதால் பதில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது என மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இன்று மதியம் 12 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.