கோவை : தஞ்சாவூர் எம்.கே. ரோட்டை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் திவாகர் (வயது 28) எலக்ட்ரிக்கல்- பிளம்பிங் தொழில் செய்து வந்தார்.இவர் சூலூர் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையம் பிரபு என்பவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.நேற்று வேலை செய்து கொண்டிருக்கும்போது சின்டெக்ஸ் டேங்க் உடைந்து மேற்கூறையில் நின்று வேலை செய்து கொண்டிருந்த திவாகர் தலையில் விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வீட்டின் உரிமையாளர் பிரபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.