சூப்பர் ஸ்டார் ஊரில் இல்லை… ரசிகர்கள் யாரும் மழையில் காத்திருக்க வேண்டாம் – லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்.!

ஜினிகாந்த் இன்று அவரது 73 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகின்றார். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், இந்த வருடம் திருச்சியில் சில பகுதிகளில் ரத்ததான மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே தனது பிறந்த நாளில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருவார்.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை முதலே ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஊரில் இல்லை எனவும் அதனால் ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் என்று லதா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

மேலும், சூப்பர் ஸ்டாரின் சார்பாக ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து ரசிகர்களைச் சந்தித்திருப்பார். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.