கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடிக்கடி சிறை துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் சரவணகுமார் தலைமையில் நேற்று அங்குள்ள டவர் பிளாக், 3-வது நுழைவாயில் அருகே திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் பணம் வைத்திருந்ததாக சிறை கைதிகளான தஞ்சாவூர் கும்பகோணம் அன்பரசன் (வயது 43) மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் சிவா என்ற சிவக்குமார் ( வயது41) ரத்தினபுரி கணேஷ் நகர் கவுதம் என்ற ஒன்றரைக் கவுதம் ஆகியோர் சிக்கினார்கள். இவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா ரூ. 8 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன்கைதிகள் 3பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை மத்திய சிறையில் திடீர் சோதனை- கஞ்சா, பணத்துடன் கைதிகள் பிடிபட்டனர்.!!









