கோவை வரும் 2 ரெயில்கள் பகுதியாக திடீர் ரத்து-ரயில்வே வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோவை – சில்சாா், திருவனந்தபுரம் – சில்சாா் ஆகிய 2 ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை – சில்சாா் வாராந்திர ரெயில் (எண்: 12515) ஜூலை 3, 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து குவாஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும். குவாஹாட்டி – சில்சாா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சில்சாா் – கோவை வாராந்திர ரெயில் (எண்: 12516) ஜூலை 5,12 ஆகிய தேதிகளில் குவாஹாட்டியில் இருந்து கோவை இடையே இயக்கப்படும். சில்சாா் – குவாஹாட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதேபோன்று திருவனந்தபுரம் – சில்சாா் வாராந்திர ரெயில் (எண்:12507) ஜூலை 5, 12 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் – குவாஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும். குவாஹாட்டி -சில்சாா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சில்சாா் – திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (எண்12508) ஜூலை 7, 14 ஆகிய தேதிகளில் குவாஹாட்டி – திருவனந்தபுரம் இடையே மட்டும் இயக்கப்படும். சில்சாா் – குவாஹாட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.