கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா,போதை மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கோட்டூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் காவல்துறையினர் பொங்காளியூர் அருகில் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கஞ்சாகடத்தி வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் அருண்ராஜ் (வயது29) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாகடத்தி வந்தது தெரிய வந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
மாணவர்களே குறி…









