திண்டுக்கல் மாவட்டம் ,பஞ்சம்பட்டி அருளானந்தர் வீதியைச் சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மகன் பிரின்ஸ் புரோனா ( வயது 19) இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அருகில் உள்ள முத்து நகரில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன் தினம் இரவில் இவர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்..அப்போது 3 கொள்ளையர்கள் அறைக்குள் புகுந்து ,கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன் ,மற்றும் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளயடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து பிரின்ஸ் புரோனா சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கத்தியை காட்டி மிரட்டி மாணவரிடம் பணம், செல்போன் பறிப்பு..!









