2 மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை சேமித்து வையுங்கள்… மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்.!

ம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தியா திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் நடுங்குகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக உஷார் நிலையில் இருக்குமாறு ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். விமானப்படை மற்றும் கடற்படையும் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளன. இதன் ஒரு பகுதியாகவே போர்ப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் போர் டாங்கிகள் மற்றும் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் செய்து வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் போர் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் எல்லைப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை நேரில் ஆய்வு செய்ததாகத் தெரிகிறது. போர் பயத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஊக்கமளிக்கவே அவர் எல்லைக்குச் சென்றதாகத் தெரிகிறது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா உறுதியாக நம்புகிறது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள். அவர்களை இந்தியா மீது தூண்டிவிட்டது பாகிஸ்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம், விசா ரத்து போன்ற தடைகள் இதில் அடங்கும். பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியா மீது தடைகளை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த நான்கு, ஐந்து நாட்களாக, ஒவ்வொரு இரவும் இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் மீது எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளதால் எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் 2 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் படி அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எல்லைகோட்டில் (எல்ஓசி) உள்ள 13 தொகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீர் பிரதமர் சவுத்ரி அன்வர் உல் ஹக் வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்தார். மேலும் உணவு, மருந்துகள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்காக பிராந்திய அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபாய் (3.5 மில்லியன் டாலர்) அவசர நிதியையும் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.