தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீா்மானத்தில், உளவு பலூனை அனுப்பியதன் மூலம் அமெரிக்க இறையாண்மைக்கு சீா்குலைவை ஏற்படுத்தியது, அது வெறும் வானிலை ஆய்வு பலூன் என்று பொய்யாகக் கூறி சா்வதேச சமுதாயத்தை ஏமாற்றியது என சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சீனா அதிருப்தி: அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை தங்களுக்கு அதிருப்தியளிப்பதாக சீனா கூறியுள்ளது. இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல்ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என்று சீனா குற்றம் சாட்டியது. தங்கள் நாட்டு வான் பரப்பில் பல நாள்களாக மிதந்து, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளைக் கடந்த சென்ற சீன உளவு பலூனை அமெரிக்கா கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.
Leave a Reply