தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் – பாண்டவர் அணி வெற்றி.!!

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கான 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் குஷ்பு,கோவை சரளா,மனோபாலா,லதா சேதுபதி உள்ளிட்ட 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தலைவர், பொருளாளர், துணை தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது.இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அதன்படி தேர்தலில் போட்டியிட்ட பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் அணி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், பாண்டவர் அணி வெற்றி பெற்றது.

தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராகு நடிகர் கார்த்திக், துணை தலைவர் பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றதாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்தார்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் தேர்தலிலும் பாண்டவர் அணி முழு வெற்றி பெற்றுள்ளது.அதன்படி குஷ்பு 1407 வாக்குகளையும்,கோவை சரளா 1399 வாக்குகளையும்,மனோபாலா 1372 வாக்குகளையும் ,லதா சேதுபதி உள்ளிட்ட 24 செயற்குழு உறுப்பினர் பதவிகளையும் அந்த அணியினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் அனைத்து பதவிகளையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.