கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ்.இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார் .இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்கள் கீதா ( வயது 42 )லதா ( வயது 39 )ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர் யோகா கற்றுக் கொள்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்ற இருவரும் பின்னர் மூளைச்சலவை செய்யப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு துறவிகள் ஆகிவிட்டனர்.மூத்த மகளின் பெயரை மா மது என்றும் இளைய மகளின் பெயரை ” மா மாயு ” என பெயர் மாற்றி விட்டனர் .அவர்களை பார்க்க வேண்டும் என்றால் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டிய நிலையில் உள்ளோம் .ஈஷா யோகா மைய நிர்வாகிகள் எங்கள் மகள்களை சந்தித்து பேச அனுமதிப்பதில்லை. திருமணம் செய்து சந்தோஷமாக மணவாழ்க்கை வாழ வேண்டிய மகள்களை இந்த கோலத்தில் பார்ப்பது மிகவும் மன வேதனை அளிக்கிறது. தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என எங்களது மகள்களை வைத்தே எங்களுக்கு எதிராக வழக்கு தொடர் வைத்துள்ளனர். அதனால் இரு மகள்களையும் மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர் .இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் .எம் . சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது .அப்போது மனுதாரான காமராஜ் ஆஜராகி எனது மகள்களை தனி அறையில் அடைத்து வைத்து அவர்களை நிர்பந்தப்படுத்திதுறவறம் பூண்டு விட்டதாக அறிவிக்க வைத்துள்ளனர். என்றார். இந்த வழக்கு விசாரணையின் போது துறவற கோலத்துடன் மனுதாரர்களின் மகள்கள் நேரில் ஆஜராகி தங்கள் தந்தை சொல்வதில் உண்மை இல்லை. எங்களது விருப்பப்படிதான்துறவறம் பூண்டு ஈஷா யோகா மையத்தில் உள்ளோம். யாரும் எங்களை அடைத்து வைக்கவில்லை. எங்கள் பெற்றோர் தங்களை கேவலப்படுத்தி வருகின்றனர் .ஈஷா யோகா மையம் மூலம் முகாம்களை நடத்தி சேவை செய்து வருகிறோம் என்றனர். அதற்கு நீதி பதிகள் நீங்கள் தான் அனைத்தையும் துறந்து சன்னியாசி ஆகி விட்டீர்களே? பெற்றோரானஅவர்களுக்கும் பாசம் இருக்கும் என்று உங்கள் உணர்வு இருக்கிறதா ?என்று கேள்வி எழுப்பினர். பின்னர் அவர்கள் இருவரையும் பெற்றோருடன் பேசும்படி உத்தரவிட்டனர். ஆனால் இளைய மகள் மட்டும் பெற்றோருடன் சிறிது நேரம் பேசினார் .அதன் பிறகு மீண்டும் வழக்கு விசாரணை வந்தபோது அந்த பெண்களின் தாயார் எங்கள் மகள்களை போல் பல பெண்கள் அங்கு வலுக்கட்டாயமாக துறவறம் ஏற்க வைக்கப்பட்டுள்ளனர். என்றனர்.
இதற்கு ஈஷா மையம் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ். ராஜேந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் ஈஷா யோகா மையத்தின் நிர்வாகியான ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு மட்டும் தடபுடலாக திருமணம் செய்துவிட்டு மற்ற பெண்களை மட்டும் எதற்காக துறவறம் ஏற்க வைக்கிறார். இந்த விவகாரத்தில் நாங்கள் யாருக்கும் எதிராகவோ ஆதரவாகவோ இல்லை .என கருத்து தெரிவித்தனர்.மனுதாரர் தரப்பு வக்கீல் எம் .புருஷோத்தமன் ஈஷா யோகா மையம் மீது இது போல பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன . பலகுற்ற வழக்குகளும்,நிலுவையிலும் உள்ளன. சமீபத்தில் கூட ஈஷா யோகா மைய மருத்துவ குழுவை சேர்ந்த டாக்டர் 12 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாககைது செய்யப்பட்டுள்ளார் என்றார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ் திலக் அந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தனியாக விசாரணை நடந்து வருகிறது. என்றார்.அதற்கு ஈஷா யோகா மையம் தரப்பில் இந்த ஆட்கொணர்வு வழக்குக்கும்,அந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. என வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் பல சந்தேகங்கள் உள்ளதால் பின்னணி அறிய வேண்டியதுஉள்ளது.எனவே ஈஷாயோகா மையம் மீதுஎத்தனை குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 4 தேதிக்கு தள்ளி வைத்தனர்.இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும்கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் 200 போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு ஏராளமான வாகனங்களில் சென்றனர்.அங்கு அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..இதை யடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Leave a Reply