கோவையில் 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது
நெல்லையை சேர்ந்தவர் வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்து முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது சித்தப்பாவும் இவர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி வாந்தி எடுத்து சோர்வாக இருந்தார். இதனை பார்த்த சிறுமியின் தாயார் சிறுமியை அழைத்து கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறிமியின் சித்தப்பா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகினறனர்.