ஷாக் நியூஸ்… இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா… ஒருநாள் பாதிப்பு 12,591… ஆக்டிவ் கேஸ்கள் 65,000-த்தை எட்டியது..!

டெல்லி: இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,000-த்தை கடந்துள்ளது. அதேநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000-த்தை தாண்டி உள்ளது.

இந்தியவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,591. இந்தியாவில் 10,827 பேர் நேற்று கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டனர்.இந்தியாவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,286.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 44261476. இந்தியாவில் கொரோனா மொத்த மரணங்கள் எண்ணிக்கை 531230. இந்தியாவில் நேற்று மட்டும் 2,30,419 கொரோனா சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.