செந்தில்பாலாஜிக்கு மீண்டும் பதவி..? ஸ்டாலின் அதிரடி .!!

ட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக 7 மண்டல பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் முக்கிய தளபதியாக இருப்பவர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த உடன் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு பவர் புல் பொறுப்பான மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் சிறைக்கு செல்ல நேரிட்டது. இதன் காரணமாக அமைச்சர் பொறுப்பை இழந்தார்.

இதனையடுத்து சிறையில் இருந்து ஜாமின் பெற்று வந்தவருக்கு அடுத்த நாளே அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மீண்டும் அமைச்சர் பொறுப்பை செந்தில் பாலாஜி இழந்தார். மேலும் கோவை மண்டல மாவட்ட அமைச்சர் பதவியும் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கும் வகையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள,தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக-வில் கட்சி அளவில் 7 மண்டலங்கள் உருவாக்கியுள்ளார். அந்த மண்டங்களுக்கு பொறுப்பாளர்களையும் நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா,மற்றும் கனிமொழி ஆகியோர் 7 மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கே.என்.நேருவுக்கு திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களும், எ.வ.வேலு-வுக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் மாவட்டங்கள், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கோவை, கரூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள்,

அமைச்சர் சக்கரபாணிக்கு சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள்,

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா-க்கு சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மதுரை, இராமநாதபுரம் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமாரி மாவட்டங்கள் என 7 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று முதல் மண்டல பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேர்தல் பணிகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.