கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அரசு பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 150 மாணவர்கள் தங்கி உள்ளனர் .கடந்த 20ஆம் தேதி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் வெளியே சென்று விட்டு இரவில் தாமதமாக விடுதிக்கு வந்துள்ளார் . இது பற்றி மூத்த மாணவர்கள் 2 பேர் அவரிடம் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே விரோதம் ஏற்பட்டது . இதை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர் மற்றும் அவரது நண்பரையும் தோப்புக்கரணம் போட வைத்து மூத்த மாணவர்கள் தாக்கி உள்ளனர் . இதில் காயம் அடைந்த மாணவர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி விடுதியில் மாணவர்களை ராக்கி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..