மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு வந்தாச்சு..!!

மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை.

இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. 2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நேரடி ஒப்புதல் தொடங்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 23ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரையும் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. காலாண்டு தேர்வு முடிந்து அடுத்து அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதில் எண்ணும் எழுத்தும் திட்ட வரலாறு மதிப்பீடு தேர்வுக்காக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் அக்.,6-ல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ அமல்படுத்தப்பட உள்ளதால், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு அக்.,6, 7, 8 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு அக்.,10-க்கு மாற்றப்பட்டுள்ளது.