கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – இருவர் கைது..!

கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று இரவு கரும்புக்கடை சாரமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார் . அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கரும்புக்கடை பள்ளி வீதியைச் சேர்ந்த சாருக்கான் (வயது 26) சவுகார் நகரை சேர்ந்த ரிஸ்வான் சுகைல் (வயது 24) என்பது தெரிய வந்தது. இருவரும் அதே பகுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது . இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..