கோவைபீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று அங்குள்ள “டைட்டல் பார்க்” ரயில்வே பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1, 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சவுரிபாளையம் சாமியார் வீதியை சேர்ந்த மகாராஜா மகன் முகிலன் ( வயது 20) கள்ளக்குறிச்சி மணி மகன் அருண்குமார் (வயது 25 )என்பது தெரியவந்தது.இருவரும் தற்போது சிவில் விமான நிலையம்,பூங்கா நகர் பகுதியில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – 2 பேர் கைது..!
