சுடுகாட்டில் கஞ்சா விற்பனை – 3 பேர் கைது..!

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் நேற்று ரத்தினபுரி கண்ணப்பன் நகர் சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 720 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் நல்லாம்பாளையம், லட்சுமி நகரை சேர்ந்த பிரவீன் என்ற புல்லி பிரவீன் (வயது 27) மணியக்காரம் பாளையம் ,சாஸ்தா நகர் ஆகாஷ் ( வயது 27) ரத்தினபுரி கண்ணப்பன் நகர் ரஞ்சித் என்ற புறா ரஞ்சித் (வயது 28) என்பது தெரிய வந்தது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்…