சரியான முறையில் வேகாமல் கொடுத்த வருத்த கோழி: சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி யின் வறுத்த கோழி சரியான முறையில் வேகாமல் உள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் அதன் சுவை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உரிமையாளர் டீலர் ஷிப்பை ரத்து செய்வது நல்லது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதனை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவர்மா சாப்பிட்டு உயிர் இழப்பு நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே அதிகாரிகள் உரிய விசாரணை செய்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க முடியும்.