கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், ‘ஸ்மார்ட் காக்கிஸ்” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளார்.
இதில் கடந்த 21- ஆம் தேதிஅதிகாலை அன்னூர் காவல் நிலையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த “ஸ்மார்ட் காக்கிஸ் “போலீசார் கரியாம்பாளையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை மாநகர ஆவாரம்பாளையத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன்
முருகேசன் (36) என்பவரை துரிதமாக செயல்பட்டு பிடித்த ரோந்து காவலர் தாமோதரன், மற்றும் ஏட்டுகோவிந்தராஜ்ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர். கார்த்திகேயன் மாவட்ட காவல் அலுவலகத்திற்குவரவழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
நள்ளிரவில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த ” ஸ்மார்ட் காக்கிஸ்”போலீசாருக்கு எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டு.!
