ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் : புதினுடன் பேச தயாராக இருக்கிறேன்- ஜோ பைடன்..!

ஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் முடியாமல் தொடர்கிறது. உக்ரைனின் நான்கு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா, அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்தது.

மேலும், தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவோம் எனவும் எச்சரித்திருந்தது.

இதற்கிடையே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிரந்தர அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போப் ஃபிரான்சிஸ், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என ஐ.நா-விடம் ரஷ்யா கோரிக்கை வைத்திருந்தது. அதன் பிறகும் தொடர் தாக்குதல் நடைபெறுவதாக உக்ரைன் குற்றம்சாட்டிவருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரான்ஸில் கூட்டு மாநாடு ஒன்றில் பேசியபோது, ரஷ்யப் பிரதமர் உண்மையிலேயே உக்ரைன்-ரஷ்ய இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினால், அதற்கான வழியைத் தேடுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தால்.. புதினுடன் பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் இன்னும் போரை நிறுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை” எனக் கூறினார்.