உச்சத்தில் ரஷ்யா – உக்ரைன் யுத்தம்: அமெரிக்கா, சீனா தனித்தனியே போர் ஒத்திகை-3ம் உலக போர் மூளும் அபாயம்… பீதியில் உலக நாடுகள்!

வாஷிங்டன் : ரஷ்யா – உக்ரைன் போர் உக்கிரம் அடைந்து இருக்கும் நிலையில், அமெரிக்காவும் சீனாவும் தனித்தனியே போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் 3ம் உலக போர் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்கா. ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள போலாந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. அதிக குண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் விமானங்கள், ஏவுகணைகள், கவச வாகனங்கள் மற்றும் அதிநவீன துப்பாக்கிக்களை கொண்டு தரை வான் கடல் என 3ம் மார்க்கங்களில் ஒத்திகை நடத்தப்பட்டது.

ரஷ்யாவின் நேச நாடான சீனாவும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. நேச நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டு கொண்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டு இருப்பதால் மீண்டும் ஒரு உலக போர் ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனிடையே ரஷ்யா ஒருபோதும் போரை விரும்பியதில்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய மோதலையும் முடிவுக்கு கொண்டுவரவே ரஷ்யா முயற்சிக்கிறது என்றும் செர்ஜி லாவ்ரவ் கூறியுள்ளார்