நாடு முழுவதுமே தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தமிழகத்தைப் போலவே அஸ்ஸாம் மாநிலத்திலும் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசு சுமார் 40 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.9,000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.இந்த தொகையில் மாதாந்திர உதவித்தொகையுடன் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஸ்ஸாம் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தொகையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்காக மொத்தமாக ரூ.3,600 கோடி ஒரே நாளில் பெண்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
40 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.9,000 வரவு வைப்பு!








