பூந்தமல்லியில் கட்டு கட்டாக ரூ.2 கோடியே 29 லட்சம் பறிமுதல் – முக்கிய கட்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பணமா..? திடீர் பரபரப்பு.!!

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி அம்சவேணி மற்றும் அதிகாரிகள் பூந்தமல்லியை அடுத்த கோலப்பஞ்சேரி 400 அடி சாலை டோல்கேட்டில் வாகன சோதனையில் பரபரப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் அதிரடி வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை மடக்கி பிடித்தவர் வேனில் இருந்த வினோத் குமார் என்பவன் இந்த வேன் யாருடையது தெரியுமா ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். இந்த பணத்தை சென்னையில் உள்ள ஒரு வங்கிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறோம் . ஆனால் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என திமிராக பதில் கூறினான். பறக்கும் படை அதிகாரி அம்சவேணி வேனை துருவி துருவி சோதனை போட்டார். வண்டிக்குள் பளபளக்கும் பணக்கட்டுகள் ரூபாய் 2 கோடியே  29 லட்சம் இருந்தது அவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வளவு பணத்தை எந்தவித ஆவணங்கள் இல்லாமல் எப்படி கொண்டு வந்தீர்கள் என்ற ஆத்திரத்தில் அம்சவேணி வண்டியை பூந்தமல்லி தாலுகா ஆபீசுக்கு எடுத்து வர வேண்டும் என ஆணை பிறப்பித்தார். அந்த பணத்துடன் தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தராஜனிடம் ஒப்படைத்தார் அந்த பணத்தை பூந்தமல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் பூந்தமல்லி கருவூலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஒப்படைத்தனர். வண்டியில் பணத்துடன் வந்த வினோத்குமார் இந்த பணம் யாருடையது என்று உங்களுக்கு தெரிந்து விடும் என்று தெனாவெட்டாக கூறியுள்ளான்..