ரோபோட்டிக் கேன்சர் எக்யூப்மென்ட் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்-அமைச்சர் பேச்சு.!!

ரோபோட்டிக் கேன்சர் எக்யூப்மென்ட் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை முதல் கொண்டுவரப்படும்-கொரோனா 4வது அலையில் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணி பேச்சு

செங்கம் மார்ச் 15

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ண குருக்கை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் கட்டிட திறப்பு விழாவில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணி ஆகியோர் திறந்து வைத்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ப.முருகேஷ் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திருவண்ணாமலை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அன்னாதுரை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே. கம்பன் மற்றும் மருத்துவ இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் வட்டார மருத்துவர் சுரேஷ் மற்றும் மருந்து மற்றும் சுகாதார நோய் தடுப்பு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா காலகட்டத்தில் தற்காலிக பணியாளர்கள் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ளது. இரண்டாவது அலையின் முடிவின்போது கேரள மாநிலத்தில் ஒரே கையேழுத்தில் 20 ஆயிரம் பணியாளர்களை நிறுத்திவிட்டார்கள். ஆனால் தமிழக முதல்வர் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு உதவி செய்யலாம் என்று கருதி மார்ச் மாதம் வரை நீட்டித்து பணி இருப்பதாக ஆணைபிறப்பித்தாக தெரிவித்தார்.

குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவத்திற்கு 7428 பேர் புதிய செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்க வேண்டிய நிலையில் ஏற்கனவே தற்காலிக பணியாளர்களாக பேரிடர் காலத்தில் பணியாற்றியவர்களுக்கு 100 மதிப்பெண்களில் 20 மதிப்பெண்கள் கூடுதலாக கொடுத்து 80 சதவீதத்திற்கும் மேலான மீண்டும் பணியில் சேர்ந்து இருப்பதாகவும், ஏதாவது ஒரு வகையில் இவர்களுக்கும் பணி வாய்ப்பு கிடைக்க இந்தத் துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், பணி கிடைக்காதவர்களுக்கு மெரிட் மதிப்பெண்கள் கொடுத்து அல்லது அடையாள அட்டைகள் மூலம் பேரிடர் காலத்தில் பணியாற்றியவர்களுக்கு இந்த துறையில் ஏற்படும் காலியிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா நான்காவது அலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் கான்பூர் ஐ.ஐ.டி ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. ஜூன் மாதத்தில் கொரோனா நான்காவது அலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அதற்கு ஏற்றார்போல் சைனா, சிங்கப்பூர், மலேசியாவை தொடர்ந்து இந்தியாவில் கேரளாவிலும் பாதிப்புகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொரோனா ஆபத்து நெருப்பாக இருந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு தமிழக மக்கள் கொரோனா குறித்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் தலைமைச் செயலகத்திற்கு என்று கட்டப்பட்ட கட்டிடத்தை முன்னாள் முதல்வர் அம்மா அவர்களால் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு உள்ள மொத்த கட்டிடத்தில் 35 சதவிகித கட்டிடங்கள் மட்டும் மருத்துவமனைக்கு பயன்பட்டு வருகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைவராலும் வைக்கப்பட்ட கோரிக்கை மீண்டும் அந்த மருத்துவமனையை தலைமைச் செயலகம் மாக மாற்ற வேண்டும் என மக்களுக்கான தேவை என்பது மருத்துவம் மருத்துவமனையின் முக்கியத்துவத்தை அறிந்து முதலமைச்சர் தலைமைச் செயலகம் எங்கு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் மருத்துவமனை தொடர்ந்து செயல்படட்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள எந்த மருத்துவமனையிலும் மாநில அரசு மருத்துவமனையில் கேன்சருக்கான ரோபோட்டிக் மருத்துவம் இல்லை, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளில் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனையை பொருத்தவரையில் 5 இடங்களில் இருப்பதாகவும், இந்தியா முழுவதும் 70 இடங்களில் மட்டுமே ரோபோட்டிக் கேன்சர் எக்யூப்மென்ட் இருப்பதாகவும் முதன்முதலில் ஒரு மாநில அரசு நிர்வகிக்கும் மருத்துவமனையில் இந்த ரோபோட்டிக் கேன்சர் எக்யூப்மென்ட்டை பொதுமக்களுக்கு மருத்துவ சேவைக்காக அர்ப்பணிக்க உள்ளதாக கூறினார்.