முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer – Political Wing) பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது.இந்தப் பொறுப்பில் இருப்பவர் பொதுவாக முதல்வரின் அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொடர்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை ஒருங்கிணைப்பார்.
முதல்வரின் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை ஒருங்கிணைத்தல் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு பேணுதல்… அரசியல் நிலவரங்கள் குறித்து முதல்வருக்கு தகவல் மற்றும் ஆலோசனை வழங்குதல்… ஊடகங்களில் வெளியாகும் அரசியல் செய்திகள் மற்றும் எதிர்வினைகளை கண்காணித்தல்.. கட்சியின் செய்தி பரப்பல் மற்றும் பொது தொடர்பு நடவடிக்கைகளில் உதவுதல்… தேர்தல் மற்றும் அரசியல் தந்திர ஆலோசனைகளில் பங்கேற்பது…முதல்வரின் அலுவலகம் மற்றும் கட்சி அமைப்புகளுக்கு இடையே இணைப்புப் பாலமாக செயல்படுதல்…
விஜய் ஒரு தீவிரமான முருக பக்தர் என்றும், அவரது ஆட்சியில் தமிழகக் கோயில்கள் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் என்றும் இவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.






