மும்மதங்கள் இணைந்து நடத்திய கூட்டுப் பிராத்தனை!

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் மழை வரம் வேண்டி மும்மதங்கள் இணைந்து நடத்திய மாபெரும் கூட்டுப் பிராத்தனை மற்றும் அன்னதான விழாவில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில் விவசாய நிலங்களும் வறட்சியோடு காணப்பட்டன . இதனைக் கண்ட மும்மதங்களைச் சார்ந்த பெரியோர்கள் பள்ளிவாசல், தேவாலயம், கோவில்களிலும் கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சித்தையன் கோட்டை தர்கா அருகே உள்ள தனியார் விவசாய நிலத்திடலில் கொட்டகை மற்றும் அன்னதான இருக்கைகள் அமைத்து நெய் சாதம், காய்கறி குழம்புகள் என அறுசுவை உணவுகளாக படைத்து இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய மற்றும் விவசாய பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கினார் .இந்த அன்னதானத்தை அருகில் உள்ள சித்தையன் கோட்டை , அழகர் நாயக்கன் பட்டி, நரசிங்கபுரம், சேடபட்டி, சொக்கலிங்கம் புரம், போடிக்காமன் வாடி,வீரசிக்கம்பட்டி, ஆத்தூர் ,செம்பட்டி சுற்றுவட்டார விவசாய பொதுமக்கள் உண்டு மகிழ்ந்து சென்றனர்.. மேலும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை மும்மதங்களை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.