முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில், “பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரைப் பற்றி மட்டுமே” என்று கூறினார். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்றால், பயங்கரவாதமும், காஷ்மீர் பிரச்னை தான் என்று இந்தியா கூறி வருகிறது. ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்று கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் சிந்து நதி நீர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நீரை பாகிஸ்தான் 80 சதவீத நம்பியுள்ளது. இந்த நிறுத்தப்பட்டதால், தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த தயார் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்.!!

பாகிஸ்தான் : இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.
பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்னை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என்று ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், பாகிஸ்தான் இதற்கு முக்கிய பங்கு வகிப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வருகிறது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இப்படி இருநாடுகளுக்கு இடையே மூன்று நாட்கள் தாக்குதல் நடந்தது.இதனை அடுத்து, இருநாடுகளுக்கு 2025 மே 10ஆம் தேதி தாக்குதலை நிறுத்தின. இந்த தாக்குதலை அடுத்து, சிந்தூர் நதிநீர் ஒப்பந்தம், வர்த்தகம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது. இதனால், பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலையில் உள்ளது. மேலும், பொருளாதார சிக்கலில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் முக்கிய கருத்தை கூறி வருகிறார். சமீபத்தில் ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த ஷெபாஷ் ஷெரீப், அங்கு அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் முக்கிய கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து இந்தியாவுடன் பேச தயாராக இருக்கிறோம். இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். நாங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம். இந்தியா போர் பாதையைத் தேர்ந்தெடுத்தால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்” என்றார்.