உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் முதல் போட்டியிலேயே தோல்வி – வெற்றியுடன் தொடங்கிய ஈக்வடார் ..!

உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியிலேயே போட்டியை நடத்தும் கத்தார் நாடு தோல்வியடைந்தது அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த ஆண்டு போட்டியை கத்தார் நாடு நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் கத்தார் மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின. ஈக்வடார் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே தங்கள் கையில் போட்டியை வைத்திருந்த நிலையில் ஆட்ட முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி வெற்றி பெற்றது

முதல் பாதி ஆட்டத்தில் ஈக்வடார் இரண்டு கோல்களைப் போட்ட நிலையில், அதன் பிறகு இரண்டாம் பாதியில் இரு அணிகளும் எந்த கோல்களைப் போடவில்லை என்பதால் 2-0 என்ற கணக்கில் ஈக்வடார் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

உலக கோப்பை நடத்தும் நாடான கத்தார் நேற்றைய போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் செனேகல் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது