தூய வெள்ளி பொருட்களின் பிரத்தியேக ஷோரூம் “மஹா மேரு சில்வர்ஸ்” கோவையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.
கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில், தூய வெள்ளி பொருட்களுக்கான புதிய பிரத்தியேக ஷோரூம் “மஹா மேரு சில்வர்ஸ்” இன்று பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.இந்த புதிய ஷோரூமை, அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி மற்றும் அம்பாள் ஆட்டோ இயக்குனர் சந்தான செல்வி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையையும் துவக்கி வைத்தனர்.

“Pure Silver • Timeless Craft” என்ற வாசகத்துடன் தொடங்கியுள்ள இந்த விற்பனை மையத்தில்,வெள்ளி சிலைகள், வெள்ளி பரிசு பொருட்கள், வெள்ளி நகைகள், வெள்ளி நாணயங்கள் மற்றும் பட்டைகள்
வெள்ளி பூஜை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.நிறுவனம் வழங்கும் அனைத்து பொருட்களும் 100% ஹால்மார்க் தரச்சான்று பெற்றவை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மக்களுக்கு உயர்தர, நம்பகமான தூய வெள்ளி பொருட்களை வழங்கும் நோக்கத்துடன் இந்த புதிய ஷோரூம் தொடங்கியுள்ளோம். நவீன வடிவமைப்புகளும், சிறந்த தரமும் கொண்ட பொருட்களை வழங்குவது எங்கள் முக்கிய குறிக்கோள் என உரிமையாளர்கள் எஸ். சசிகுமார் மற்றும் செந்தில் வடிவு தெரிவித்தனர்.
கோவையில் வெள்ளி பொருட்கள் வாங்க விரும்பும் நுகர்வோருக்கு “மஹா மேரு சில்வர்ஸ்” ஒரு புதிய சிறந்த விற்பனை தளமாக அமையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.







