புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்..!

புதுச்சேரி வில்லியனூர் புனித லூர்தன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் சமுதாய நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் ஒரு நாள் களப்பயணமாக புது பூஞ்சோலைக் குப்பம் கிராமத்திற்கு சென்றனர். சி.எஸ்.எஸ். திட்ட அலுவலர் நா. சிவநேசன் நோக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ஜோசப் சகாயராஜ் அடிகளார் தலைமையேற்றார். தாளாளர் பிச்சைமுத்து அடிகளார் வாழ்த்திப் பேசினார். ”இயற்கையை நேசிப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” என்கிற தலைப்பில் கருத்தரங்கம், ‘சுற்றுச்சூழல் பாதிப்புக்கான காரணங்கள், அதன் தீர்வுகள்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஆகியன நிகழ்ந்தன. வீட்டளவில், பள்ளியளவில், சமுதாய அளவில் இயற்கையை நேசிப்பது எப்படி? என்கிற தலைப்புகளில் கோகுல், சச்சின், ஆடம் ஆகிய தன்னார்வலர்கள் பேசினார்கள். அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாம் நடைபெற்ற சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். என். எஸ்.எஸ். மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார், உடற்கல்வியாசிரியர் சி. பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ‘இயற்கையை நேசிப்போம்’ விழிப்புணர்வு துண்டுபிரசுரம் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது. தன்னார்வலர் முகம்மது ஆசிக் வரவேற்றார். தாமஸ் நன்றி கூறினார்.