பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி… கோவையில் பாஜகவினர் கொண்டாட்டம்.!!

பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழு வீச்சில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் நாடு முழுவதும் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தி உயிரை காப்பாற்றினார். நாட்டின் மதிப்பை 9 ஆண்டுகளில் உலகளவில் உயர்த்தி இருக்கிறார். ஏழை மக்கள் கவுரவத்துடன் உணவு பாதுகாப்பை பெற்று கொடுத்தவர். அதே போல் கடந்த 9 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவை போல் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு முன்னேற்றம் காணவில்லை என்றும்
இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் விலை உயர்ந்தாலும், ஏழை மக்களுக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வருவதாகவும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. ஏழைகளுக்காக கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் நாடு முழு வீச்சில் முன்னேற்றம் கண்டு வருவதுடன், உலகளவில் இந்தியாவின் அந்தஸ்தும் உயர்ந்து உள்ளது.

இதனை நாடு முழுவதும் பா.ஜ.க வினர் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இந்த மாதம் இறுதி வரை கொண்டாட உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக இன்று கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் கூடிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.