பிரதமர் மோடியின் 72வது வது பிறந்தநாள்.. ஏலத்திற்கு வந்த பரிசுப் பொருட்கள்..!!

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அவர் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் இன்று முதல் ஏலம் விடப்படுகிறது.

பாரத பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பாஜக தொண்டர்கள் அவருடைய பிறந்த நாளை கோலாகாலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் இன்று முதல் ஏலம் விடப்படுகின்றது. ஏற்கனவே 3 முறை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், இன்று முதல் 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது.

இன்று தொடங்கும் ஏலம் அக்டோபர் 2-ஆம் தேதியுன் முடிவடைகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.