இடைத் தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டி- வேட்பாளரை அறிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்..!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜன.23) காலை 10 மணிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும். இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளரான ஆனந்த் போட்டியிடுகிறார். இன்றைய நிலையில் தே.மு.தி.க. எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தே.மு.தி.க.வும் இடைத்தேர்தல் களத்தில் குதித்துள்ளது .

இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.