வேலூர் மாநகராட்சியில், பாமக சார்பில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரை திமுக மாவட்ட செயலாளர் பரசுராமன் கடத்தி சென்றுள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் திமுகவினர் குறுக்கு வழியில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக வேலூரில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது! மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply