பல்வேறு அமைச்சக செயலர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் அவசர ஆலோசனை.!!

பரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

அப்போது செயல்பாட்டு தயார் நிலைக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மேலும் கூறியதாவது: தேசிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார் நிலைக்கான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வேளையில், விழிப்புணர்வு மற்றும் தகவல் தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும். சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அவற்றை எதிர்கொள்வது மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இந்த கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாநில அதிகாரிகள் மற்றும் களத்தில் உள்ள நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை பராமரிக்க அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் பயணிக்கிறது. இந்த நிலையில், விழிப்புணர்வு, ஒருங்கிணைப்பு மற்றும் தெளிவான தகவல் தொடர்பு மிகவும் அவசியமானது என்பதை அமைச்சக செயலர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.