பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 8,11,172 மாணவர்கள் இந்தாண்டு பிளஸ் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 7,39,539 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்களில் 87.26 சதவீதம் பேரும், மாணவிகள் 94.69 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இந்த தேர்வில் கோவை மாவட்டத்தில் 96.02 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழகத்தில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது.
இதற்கு அடுத்த ஈரோடு 95.56%, திருப்பூர் 95.23%, விருதுநகர் 95.06%, அரியலூர் 94.96%, பெரம்பலூர் 94.82%, சிவகங்கை 94.57%, திருச்சி 94.0%, குமரி 93.96%, தூத்துக்குடி 93.86% ஆகிய மாவட்டங்கள் தேர்ச்சி பெற்று உள்ளன.