இந்தியா உடனான வர்த்தக முறிவால்… மருந்து பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தான்.!!

ஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன.

முக்கியமாக அங்கே மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் இதனால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) அங்கே கடும் பரபரப்பில் உள்ளது. பாகிஸ்தானின் மருந்து விற்பனையில் 40 சதவிகிதம் வரை இந்தியாவில் இருந்து நேரடியாகவும்.. இந்தியாவில் உருவாக்கப்பட்டு வேறு நாடுகள் வழியாகவும் பாகிஸ்தானுக்கு செல்கிறது.

இப்போது பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் மருத்துவ துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ​​பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருட்களில் 30% முதல் 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது, இதில் செயலில் உள்ள மருந்து பொருட்கள் (API) மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும்.. இதெல்லாம் பாகிஸ்தானுக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருளில் 30%-40% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. மிக முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், உயிரியல் தயாரிப்புகள், தடுப்பூசிகள் மற்றும் செரா, குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் மருத்துவ துறையின் ப்யூஸை பிடுங்கி உள்ளது இந்தியா. மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ராஜாங்க ரீதியாக பாகிஸ்தானை ஏற்கனவே இந்தியா அடிக்க தொடங்கிட்டது. பாகிஸ்தான் – இந்தியா இடையிலான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியான அட்டாரி பார்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழியை பயன்படுத்தி முறையான ஒப்புதல்களுடன் சென்றவர்கள் 01 மே 2025 க்கு முன் அந்த வழியாக திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள பாதுகாப்பு, இராணுவம், கடற்படை மற்றும் விமான படை ஆலோசகர்கள் “தனிநபர் அல்லாதவர்” என்று அறிவிக்கப்படுகிறார்கள். இதன் அர்த்தம், இத்தனை காலம் அவர்கள் தூதரக பணிகள் அடிப்படையில் இங்கே இருந்தனர். இனி அந்த அனுமதி அவர்களுக்கு கிடையாது. தனியாக இனி விசாவும் வழங்கப்படாது. இதனால் அவர்கள் உடனே வெளியேற வேண்டும். இதற்கு 1 வாரம் அதிகபட்சம் டைம் தரப்படும். அதேபோல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் கமிஷனில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு / கடற்படை / விமானப் படை ஆலோசகர்களை திரும்பப் பெறுகிறது. அந்த பதவிகள் ரத்து செய்யப்பட்டதாகக் அறிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உயர் கமிஷனில் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த பலம் தற்போதுள்ள 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

இயற்கை வளங்கள் ரீதியாகவும் பாகிஸ்தானை இந்தியா அட்டாக் செய்து வருகிறது. உதாரணமாக 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும். சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.

இனி நிர்வாக ரீதியாக அட்டாக் செய்ய இந்தியா தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது பாகிஸ்தான் அரசியலில் மறைமுகமாக ஆட்டத்தை ஏற்படுத்துவது. அங்கே அரசியல் நிலையற்ற தன்மையை உளவாளிகள் மூலம் ஏற்படுத்துவது. ஏன் அரசையே கூட கவிழ்ப்பது. இது இந்தியாவிற்கு கைவந்த கலை. இதனால் இந்தியா விரைவில் அது போன்ற தாக்குதல்களையும் கூட தொடங்கும்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பின் ஹபீஸ் சயீத் தொடர்புடைய தீவிரவாத இயக்கம் இருக்கிறது. ஹபீஸ் சயீத் என்ற இந்த ஒற்றை தீவிரவாதி இந்தியாவில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துவிட்டார். ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்திய வரலாற்றில் மிக மோசமான தாக்குதலில்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. மும்பை தாக்குதலுக்கு பின்பாக நேரடியாக பொதுமக்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா அதிகரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் கடுமையான விவாதங்களை .. மக்கள் இடையே அச்சங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்தே பாகிஸ்தானியர்கள் விசா நீக்கப்பட்டு உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய நடவடிக்கை என்று பார்த்தால் சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது என்ற நடவடிக்கைதான்.

பொதுவாக போர் காலத்தில்தான் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் இப்போது எடுக்கப்பட்டது உள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.