ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: ஈரானின் அணு நிலையங்களில் அமெரிக்க தாக்குதல்

வாஷிங்டன்: அமெரிக்கா ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற குறியீட்டுப் பெயரில், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களில் (நடான்ஸ், இஸ்பஹான், பார்டோ) சுமார் 25 நிமிடங்களில் மிகுந்த துல்லியத்துடன் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் 7 B-2 வகை குண்டுவீச்சு விமானங்களுடன், 125க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டன. பார்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் பதுங்கு குழி வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. அமெரிக்க நேரப்படி மாலை 6.40 மணிக்கு இந்த தாக்குதல் துவங்கியதாகவும், பின் விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியதாகவும் அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் தெரிவித்தார்.ஈரான் பக்கம் எந்த துப்பாக்கிச்சூடும் நிகழாதது குறிப்பிடத்தக்கது. இஸ்பஹானில் ஏவுகணைகள், பார்டோவில் நீர்மூழ்கிக் கப்பல் வழியே தாக்குதல் நடைபெற்றது.இந்த நடவடிக்கையால், ஈரானின் அணு திட்டத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படுவதாக கருதப்படுகிறது. ஆனால், ஈரான் இது தொடர்பாக “நாங்கள் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்” என பதிலளித்துள்ளது.