கோவை : நேற்று வாலாங்குளம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன் ஸ்பெக்டர் சஞ்சய் அபினவ் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் ,80 அடி ரோடு, அங்கண்ணன் வீதியை சேர்ந்த ஜெய கண்ணன் (வயது 41) என்பது தெரிய வந்தது.
இதேபோல கரும்புக்கடை போலீசார் அங்குள்ள ஆசாத் நகர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி வியாபாரம் செய்ததாக கரும்பு கடை ஆசாத் நகரை சேர்ந்த அனீஸ் (வயது 50) நாகூர் மொய்தீன் ( வயது 60) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.







