வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் காயம் – பொதுமக்கள் அச்சம்.!!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட காடம்பாறை சூடக்காடு சராகம் பகுதியான கேஸ்மட்டம் என்ற இடத்தில் காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த மூர்த்தி சுமார் (வயது 37) த/பெ.ராமசாமி என்பவர் நேற்று மாலை சுமார் 06.00 மணியளவில் வெள்ளிமுடி செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது 6 காட்டு யானைகள் கூட்டம் ஒரு குட்டியுடன் இருந்த போது எதிர்பாராத விதமாக மேற்படி நபரை தாக்கி காயமடைந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சம்மந்தப்பட்ட பகுதிக்கு பிரிவு வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனப்பணியாளர்கள் கொண்ட குழு விரைந்து சென்று காயமடைந்த நபரை மீட்டு அவசர ஊர்தியின் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு இடது நெஞ்சில் காயமடைந்து வீக்கத்துடன் இருந்த அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் மருத்துவ உதவிக்காக வனத்துறை சார்பாக வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு காட்டுயானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் பல்வேறு பகுதிகளில் மனிதர்களை தாக்கி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்..