தீக்குளித்து மூதாட்டி தற்கொலை..

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள வடசித்தூரை சேர்ந்தவர் ரங்கசாமி என்ற கன்னையன் .இவரது மனைவி துளசி அம்மாள்( வயது 73) இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.துளசி அம்மாள் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த துளசியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .இதனால் உடல் முழுவதும் கருகி அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து நெகமம் போலீசில் ரங்கராஜ் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.