கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயனை சந்தித்து நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் போலியாக சோதனை சாவடிகள் அமைத்து கனிம பொருட்களை ஏற்றி வரும் டிப்பர் லாரிகளிடம் இருந்து வரி என்ற பெயரில் பண வசூல் செய்யப்பட்டு வருகிறது .அதற்கு சில அதிகாரிகள் மற்றும் போலீசார் உடந்தையாக இருக்கிறார்கள். எனவே தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி குற்றம் செய்பவர்களையும்,அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலி சோதனை சாவடி அமைத்து டிப்பர் லாரிகளில் பணம் வசூல் – உடந்தையாக இருக்கும் அதிகாரிகள்.!!
