கோவையில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்த 70 கிலோ கஞ்சா பறிமுதல்-வடமாநில ஆசாமிகள் கைது.!!

கோவை சூலூர் பக்கம் உள்ள செலக்கரிசல் , லட்சுமி நகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர்கள் குப்புராஜ், ரவி ,ஏட்டு ராமகிருஷ்ணன், போலீஸ்காரர் வெற்றி.ஆகியோர் நேற்று இரவு அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட 70 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன. இதை பதுக்கி வைத்திருந்ததாக ஒடிசாவை சேர்ந்த சிபாராம் மகாரானா ( வயது 40)சுதர்சன் புகன்(வயது 41)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் இந்த கஞ்சாவை கோவையிலுள்ள சில்லரை கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக வட மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.